செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:24 IST)

ஜூனியர் என் டி ஆரின் சகோதரர் தாரக ரத்னா மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

ஜூனியர் என் டி ஆரின் சித்தப்பா மகன் தாரக ரத்னா உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார்.

தாரக ரத்னா ஒக்டோபர் நம்பர் குராடு, தாரக், யுவ ரத்னா, பத்ராத்ரி ராமுடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். என் டி ஆரின் மகன் நந்தமுரி மோகன் கிருஷ்ணாவின் மகன் தாரக ரத்னா. இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு அலேக்ரா ரெட்டி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மிக இளம் வயதில் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ள அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பாலகிருஷ்ணா, ஜுனியர் என் டி ஆர் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.