வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 13 டிசம்பர் 2025 (14:16 IST)

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

bharathi
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டார்கள். அதிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்திஅகள் தொடங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது.

நாம் தமிழர் சீமான் தனியாக போட்டியிடுவதாக அறிவித்து விட்டார்.  விஜயின் தமிழக வெற்றி கழகமும் தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்புண்டு. ஒருபக்கம், தேமுதிகம் பாமக போன்ற கட்சிகளும் எந்த கட்சியுடன் இணைவார்கள் என்பது தெரியவில்லை. ஒருபக்கம் தமிழகத்தில் SIR பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நாளை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ‘முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் வாக்காளர்களின் வாக்குரிமை பரிபோகாமல் இருக்க திமுகவினரும் SIR பணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இறுதி பட்டியல் 19ம் தேதி வெளியாகும். தமிழ்நாட்டில் சுமார் 85 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. அதில் தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை பெற்று தருவோம்.

இந்தியாவில் SIR வேண்டுமென நீதிமன்றத்திற்கு போன ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். அந்த கட்சியில் இருந்தே பலரும் ஒரு நடிகரின் கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருக்கிறார்கள்.. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார்.. அதேபோல் அமிதாவும் பலமுறை வந்தார்.. அவர்கள் பிரச்சாரம் செய்த எல்லா தொகுதிகளும் எங்களுக்கே கிடைத்தது. எனவே இந்த முறையும் அவர்கள் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வரவேண்டும்’ என்று நக்கலாக பேசியிருக்கிறார்.