1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (18:22 IST)

திமுகவை குற்றஞ்சாட்டுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

RS Bharathi
தங்களுக்குள் நடக்கும் பிரச்சனைக்கு திமுகவை குற்றஞ்சாட்டுவதா?  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
திமுகவின் பின்னணியில்தான் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாகவும், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எடப்பாடிபழனிசாமி குற்றம் சாட்டினார் 
 
இந்த நிலையில் இதுகுறித்து பதிலடி கொடுத்த ஆர் எஸ் பாரதி வருமான வரி சோதனையை நடத்திய மத்திய அரசை கண்டிக்க பழனிசாமி மறுக்கிறார் என்று கூறினார் 
 
திமுகவின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருகிறார் என்றும் தங்களுக்கு இடையிலான பிரச்சனையை திமுக மீது திசை திருப்புகிறார் எடப்பாடிபழனிசாமி என்றும் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்