1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (16:56 IST)

ரவுடிகளை அழைத்து வந்தார் ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

EPS
அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ரவுடிகளை அழைத்து வந்தார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்
 
அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை அழைத்து வந்து கட்சிக்காரர்களை ஓபிஎஸ் தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் இவரையெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு வெட்கப்படுஇறேன் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார் 
 
தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர் ஓபிஎஸ் என்று கூறிய ஈபிஎஸ், இன்று கொடூரமாக அடித்து தாக்கிய கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது என்றும் அவர் கூறினார் 
 
பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது என்றும் ஆனால் அவர் வரவில்லை என்றும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்