வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:38 IST)

முன்னாள் அதிபரா இருந்தாலும் சிறந்த தொகுப்பாளர்? – எம்மி விருது பெற்ற ஒபாமா!

ஹாலிவுட்டில் வழங்கப்படும் பிரபல சினிமா விருதுகளான எம்மி விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் சினிமாவில் வழங்கப்படும் இசைக்கான கிராமி விருதுகள், சினிமாவுக்கான எம்மி விருதுகள் போன்றவை ரொம்பவே பிரபலமானவை. இந்த ஆண்டிற்கான எம்மி விருதுகள் வழங்கும் விழா நடந்து முடிந்த நிலையில் சிறந்த தொகுப்பாளருக்கான எம்மி விருது முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது மனைவியுடன் சேர்ந்து “Our Great National Parks” என்ற ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார் ஒபாமா. இந்த ஆவணப்படத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திரூந்தது. 5 எபிசோடுகள் கொண்டு இந்த ஆவணப்படத்தை ஒபாமாவே தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த ஆவணப்படத்திற்காக சிறந்த தொகுப்பாளர் பிரிவில் ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரண்டாவது எம்மி விருதை பெரும் அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.