செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (12:48 IST)

10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசுகின்றனர் – இபிஎஸ்!!

தற்போது பத்து திமுக எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.


திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார். அப்போது அவர் அங்கு பேசியதாவது,

அதிமுக ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினோம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து திடடங்களை செயல்படுத்தினோம். ஆனால் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக மூடுவிழா நடத்தி வருகிறது.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை போன்றவை தினந்தோறும் நடந்து வருகிறது. சர்வாதிகார ஆட்சியை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். திறமையற்ற இந்த அரசை விரைவில் அகற்ற மக்கள் நல்ல பதிலை அளிக்க வேண்டும்.

தற்போது பத்து திமுக எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர். திமுக ஒரு கார்ப்பரேட் கட்சியாக உள்ளது. ராகுல் தனது கட்சியை வளர்க்க நடைபயணம் செல்கிறார் என பேசியுள்ளார்.