மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: இன்று முதல் டோக்கன் விநியோகம்!
மிக்ஜாம் புயல் நிவாரணம் பெற இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது
சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து நான்கு மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னையில் மட்டும் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் மற்ற மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நிவாரண நிதி பெற இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்களுக்கு டிசம்பர் 17 முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran