1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (16:59 IST)

சிலிண்டர் விலை மேலும் ரூ.500 குறைப்பு.. முதல்வர் அதிரடி உத்தரவு..!

Gas
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு 200 ரூபாய் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது என்பதும் இது இன்று முதல் அமலுக்கு வந்தது. 
 
இதனால் சென்னையில் 1118 ரூபாய் என விற்பனையாளர் சிலிண்டர் விலை தற்போது 918 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நிலையில் புதுவையில் மாநில அரசு சிலிண்டர் விலையை 500 ரூபாய் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 300 ரூபாய் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  
 
மேலும் மாநில அரசின் சார்பில் சிவப்பு அட்டைகளுக்கு 300 ரூபாய் மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 150 ரூபாய் மானியம் தரப்படும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  
 
நேற்று மத்திய அரசு ரூபாய் 200 சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் இன்று புதுவை மாநில அரசு மேலும் 500 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளதால் புதுவை மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
 
Edited by Mahendran