செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (15:07 IST)

மதுரை ரயில் விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி!

madurai accident
உத்தரபிரதேசம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்த  சுமார் 60 -க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவிட்டு, இன்று அதிகாலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பயணிகள் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்திற்கு, சட்டவிரோதமமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று  தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இந்த நிலையில், ‘’உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்  நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ‘’அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’உயிர் பிழைத்தவர்களை ரயில்வே நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார்.