செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (08:11 IST)

வீட்டு உபயோக சிலிண்டர்.. இன்று முதல் விலை குறைப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து இன்று முதல் சிலிண்டர் விலை 200 குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கான விலை குறைப்பு இன்று முதல் அமலானதை அடுத்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  எனவே சென்னையில் இதுவரை 1118.50 ரூபாய் என சிலிண்டர் விலை விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று முதல் 918.50 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரூ.200 சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சென்னையில் இன்று முதல் 918.50 என சிலிண்டர் விற்பனை ஆகும் என்றும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva