காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை - தமிழக முதல்வர்

cm
Last Updated: சனி, 7 ஏப்ரல் 2018 (13:25 IST)
ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. 
 
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணி பளுதூக்குதல் பிரிவில் 3 தங்கம் பதக்கம் வென்றுள்ளது.
satish
இந்நிலையில், தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த, தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு தமிழக அரசின் சார்பில் சதீஷ்குமாருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :