திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (11:30 IST)

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. 
 
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணி பளுதூக்குதல் பிரிவில் 3 தங்கம் பதக்கம் வென்றுள்ளது.
 
இந்நிலையில், தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழத்து தெரிவித்துள்ளார். அதில் "பளுதூக்கும் பிரிவில் மூன்றாவது நாளாக வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றனர். ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.