திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (07:36 IST)

காமன்வெல்த் போட்டி: தமிழக வீரரால் கிடைத்த 3வது தங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் சற்றும் முன் மூன்றாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சற்றுமுன் நடந்த  77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரை சேர்ந்த சதீஷ்குமாருக்கு தமிழக மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் காமல்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், இரண்டாமிடத்தில் இங்கிலாந்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.