வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (22:44 IST)

திடீரென முக்கிய சேவையை நிறுத்துகிறது கூகுள்

கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வரும் நிலையில் இன்பாக்ஸ் செயலி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இன்பாக்ஸ் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், நட்ஜஸ், நோட்டிஃபிகேஷன்கள், ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் ஆகிய அம்சங்கள் இருந்ததால் பயனாளிகள் இந்த சேவையை விரும்பினர்.

ஆனால் இந்த இன்பாக்ஸ் செயலியின் சேவையை வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஜிமெயில் அம்சங்களுக்கான மேலாளர் மேத்யூ சாட் என்பவர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, '"அனைவருக்கும் சிறப்பான மின்னஞ்சல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேலும் சிறப்பான அணுகுமுறையை கையாள வேண்டும். இதனால், ஜிமெயிலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, இன்பாக்ஸ் சேவையை மார்ச் 2019-க்குள் நிறுத்த இருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

இதே கூகுள் நிறுவனம் 2019 மார்ச் மாதத்துடன் ஷார்ட் யூஆர்.எல் சேவையையும் நிறுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.