வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (15:25 IST)

காக்கி உடை போட்டு 18 லட்சத்தை ஆட்டைய போட்டது யார்?

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் 18 லட்சத்தை எடுத்து யார் என்ற க்ளு கிடைத்துள்ளது. 
 
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.   
 
இந்த பிரச்சனையை கைக்களப்பாக மாறி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதால் அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   
 
இதனால் அந்த சுங்கச்சாவடி உடனே திறக்கப்பட்டு கட்டணமின்றி அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் சேதம் அதிகம் என்பதால் ஒரு வாரக்காலத்திற்கு கட்டணம் வசூலிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. 
 
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மேலும் பரபரப்பை  ஏற்படுத்தும் வகையில் மோதலின் போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குபதிவு செய்யப்பட்டது. 
 
இந்த புகார் குறித்து விசாரித்த போது, அருகில் இருந்த சிசிடிவி மூலம் காக்கி உடை அணிந்த நபர் பணத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபர் என்று விரைவில் கண்டுபிடிக்கப்படும் என தெரிகிறது.