1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:39 IST)

ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்: மேல்முறையீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

மகளிர் உரிமை திட்டம் ஆயிரம் ரூபாய் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு  வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.


ஆனால் இன்னும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலருக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாமா அல்லது ஆயிரம் ரூபாய் வரும் என்று காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
 
வட்டாட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran