செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (22:33 IST)

ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை! கட்சி அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலில் குதிக்கவிருப்பதாக அறிவித்து சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அவர் எப்போது அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிப்பார் என்று ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பிற அரசியல் கட்சிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

இந்த நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற கோவை, திருச்சி, மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை செய்ய இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அதே டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரஜினி தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதால் அவர் திரும்பி வந்த பின்னர் ஜனவரி இறுதியில் கட்சி அறிவிப்பை தெரிவிப்பார் என்றும் இன்னொரு தகவல் வெளிவந்துள்ளது.