வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:53 IST)

தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு உயர்வு.. ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சி..!

rice
தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ 17 வரை உயர்ந்துள்ளதாகவும், இதையடுத்து சென்னையில் ஏற்கெனவே கிலோ 60 க்கு விற்பனையான அரிசி தற்போது ரூ68ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது என்பதும், 
அரிசியின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஏற்கனவே பால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில் தற்போது அரிசி விலையும் உயர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற மலிவுகளை அரிசியை வெளியிடுவது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva