ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (16:46 IST)

களைகட்டிய எருது விடும் விழா..! களத்தில் சீறிபாய்ந்த காளைகள்..!!

bulls
பாலக்கோடு அருகே தொட்டபாவளி கிராமத்தில் ஶ்ரீ பட்டாளம்மன் மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறி பாய்ந்து சென்றன.
 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொட்டபாவளி கிராமத்தில் ஶ்ரீ பட்டாளம்மன் மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருது விடும்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
 
அதன்படி இந்த ஆண்டு எருது விடும் விழா களைகட்டியது. 12 கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
 
முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின்னர்,  ஊர் கவுண்டர் காளை விடப்பட்டது.
 
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட  காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு  விரட்டி சென்றனர். 

 
இந்த போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  மாரண்ட அள்ளி போலீசார் பணியில் ஈடுபட்டனர்.