சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி
குற்றங்களையும், கூட்டங்களையும் தடுக்க கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சூப்பர் ஐடியா – குற்றங்களை தடுக்கவும், கூட்டத்தினை கட்டுப்படுத்தவும் பாடிவோர்ன் கேமிரா, மெகாபோன் ஆகியவற்றினை காவலர்களுக்கு வழங்கியதோடு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி கொடுத்து பாராட்டினர் .
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுந்தரவடிவேல் தலைமையில் இந்த வாரம் சிறப்பாக பணியாற்றி, குற்றச்சம்பவங்களை தடுத்து, பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் 17 காவலர்களுக்கு வெகுமதி அளித்ததோடு அவர்களை பாராட்டினார். இதனையடுத்து, கூட்டம் கூடுவதை தடுக்க மெகாபோன் என்கின்ற ஒலிபெருக்கி 17 காவல்நிலையங்களுக்கும், குளித்தலை, கரூர், அரவக்குறிச்சி ஆகிய காவல்துறை சப்டிவிசன்களுக்கு 3 பாடிவோர்ன் கேமிரா வழங்கினார். மேலும், கரூர் மாவட்ட அளவில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வான 10 நபர்களுக்கு திருச்சி மத்திய மண்டலத்துறை ஐஜி வாழ்த்து மடலுடன் டைரி மில்க் சாக்லெட் கொடுத்து கரூர் எஸ்.பி சுந்தரவடிவேல், அவர்களை பாராட்டி சென்னையில் நடைபெறும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், தனிப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் ராஜசேர்வை மற்றும் போலீஸார் ஆகியோர் உடனிருந்தனர். ஒரே நாளில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ச்சிகளாக கரூர் மாவட்ட காவல்துறை கணிகாணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றதால், கரூர் எஸ்,பி அலுவலகம்., விழா கோலம் பூண்டது போல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது