1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (19:29 IST)

ஓய்வு பெறும் வயது 60ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்!

தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தியது என்பது தெரிந்ததே. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும் வேலை இல்லாத இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது
 
இதேபோல் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துக் கொண்டே சென்றால் இளம் பட்டதாரிகளுக்கு வேலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என கூறிய நீதிபதி அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தார். அதுமட்டுமின்றி அவர் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த பொதுநல வழக்கும் தொடர முடியாது என்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.