ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (10:50 IST)

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது சிறுமி!

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 
மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்தச் சிறுமி ஐந்து ஆண்களால் கடந்த எட்டு மாதங்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
 
பிறந்த பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறார் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
 
தம்மை வல்லுறவு செய்ததுடன், அவரது நண்பர்களுடனும் உடலுறவு கொள்ள வற்புறுத்திய உறவினர் குழந்தையைக் கொல்ல உதவினார் என்று அந்தச் சிறுமி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
அந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள்.