வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (11:02 IST)

இரவு நேரம் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு!

இரவு நேரம் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு!
வேலூர் மாவட்டத்தில் இரவு நேரக் குற்றங்களை களையும் வகையில் இரவில் இயக்கப்படும் வாகனங்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

 
வேலூரில் சமீபத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த விவாகரத்தை தொடர்ந்து இரவு நேரங்க்களில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிரைவரின் ஐடி நம்பர், உரிமையாளர் பெயர், விலாசம், டிரைவர் மொபைல் எண், ஓட்டுந்ர் உரிமம், லைசன்ஸ் ஆகியவை பயணிகள் பார்வைக்கு தெரிஉம்படி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 
மேலும், இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுபவர்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னர் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.