திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (19:00 IST)

தி காஷ்மீர் பைல்ஸ் பார்க்க போகிறவர்களுக்கு கட்டணம் கிடையாது: ஆட்டோ டிரைவர் அறிவிப்பு!

தி காஷ்மீர் பைல்ஸ்  படம் பார்க்க செல்பவர்களுக்கு ஆட்டோ கட்டணம் கிடையாது என ஆட்டோ டிரைவர் ஒருவர் அறிவித்துள்ளார் 
 
தி காஷ்மீர் பைல்ஸ்  என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தி காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்க செல்பவர்களுக்கு ஆட்டோ கட்டணம் கிடையாது என்றும் இலவசமாகவே அவர்களை திரை அரங்கிற்கு அழைத்து செல்வதாகவும் அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்த படம் ஒவ்வொரு இந்துவுக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காகவே இந்த சலுகையை அறிவித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.