திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:32 IST)

சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த நாணயங்கள் அகற்றம்

coins
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த நாணயங்கள் அறுவைச் சிகிச்சையின்றி அகற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கோவிந்தம்பட்டு பகுதியில் வசிப்பவர் குடியரசு. இவர் மகன் மணிமாறன்( வயது5). இவர் நேற்று காலை வீட்டில் விளையாடும்போது, 3 நாணங்களை விழுங்கியுள்ளார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  பெற்றோர் அனுமதித்தனர்.

மருத்துவர் தீவிர பரிசோதனை மேற்கொண்டபோது, உணவுக் குழாவில்  நாணயங்கள் சிக்கியிருந்ததை கண்டுபிடித்தார்..

இதை அகற்றும்  முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அதன்படி, விரைவாகச் செயல்பட்டு, அறுவைச் சிகிச்சையின்றி, உணவுக் குழாயில் சிக்கியிருந்த 3 நாணயங்களை அகற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.