வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (15:23 IST)

உதவியாளர்களை இன்பத்தில் ஆழ்த்திய விஷாலின் அண்ணி... என்ன விஷயம்தெரியுமா?

ஆந்திராவை சேர்ந்த நடிகையான ஸ்ரேயா ரெட்டி ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு மலையாளம்,தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். 
 
தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் திமிரு வில்லியாக நடித்து விஷாலை மிரட்டியெடுத்திருப்பார். தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம்,  காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
இப்படத்தில் தன்னுடன் வேலை பணிபுரிந்த உதவியாளர்களுக்கு தங்கக் காசை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினராம்.