வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (15:15 IST)

1 ரூபாய் நாணயங்களைச் சேகரித்து டெபாசிட் கட்டிய வேட்பாளர்!

karnataka
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 1 ரூபாய் நாணயங்களைச் சேகரித்து டெபாசிட் பணம் கட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதது. இதில், ஆளுங்கட்சியாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட  முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதில், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், யாதகீர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான யாங்கப்பா இன்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவர் வாக்காளர்களிடம் இருந்து 1 ரூபாய்  நாணயங்களை சேகரித்து ரூ.10 ஆயிரம் சேகரித்து, அதை டெபாசிட் பணமாக பட்டியுள்ளார்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடடம் பேசிய அவர், ‘’என் வாழ்க்கை என் சமூகத்தினர் மற்றும் கிராம மக்களுக்கு அர்பணிப்பேன் என்று  கூறியுள்ளார்.