1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:41 IST)

சாலை நடுவே சண்டை போட்ட ’ கரடிகள் ’... வைரலாகும் வீடியோ !

இங்கிலாந்து நாட்டில் உள்ள கொலம்பியாவில் , இரு கரடிகள் சண்டையிட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
பிரிட்டிஷ்  நாட்டைச் சேர்ந்தவர் கேரி மெக்கிலிவெரி. இவர்  கொலம்பியாவில் உள்ள  பிரதான சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுசாலையில் நின்று இரண்டு கரடிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேரி மெக்கிலிவெரி,  தனது செல்போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்து காணக் கிடைக்காத அரிய  வீடியோ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோ 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.