1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (12:46 IST)

சமூக வலைதளத்தில் வெப்துனியாவின் பங்கு!!

வெப்துனியாவின் தொடங்கிய நாட்களில் சமூகவலைதளத்தின் பயன்பாடு மிகவும் குறைவானர்களே பயன்படுத்தி வந்தனர். 1999-ஆம் ஆண்டில் ஆரம்பித்த இதன் தலைமையகம் இந்தூரில் இருந்தாலும், நம்பிக்கையோடு தமிழகத்திலும் ஆரம்பித்து இன்றைய அளவில் மக்கள் அறியும்  வகையில் முன்னேறியுள்ளது.
இன்றைய உலகமே செல்போனுக்குள் சுறுங்கிவிட்டது. அதிலும் சமூக வலைதளங்கள் இன்றைய இளசுகள் காட்டும் ஆர்வம் முந்தைய தலைமுறையினரையே பொறாமை கொள்ளச் செய்யும் விதத்திற்கு கொண்டு செல்லுகிறது. ஆனால் இந்த ஃபேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக  வலைதளங்களில் பயனர்களை வெப்துனியாவில் பக்கம் பார்க்க வைக்க, புதுபுது யுக்திகளை புகுத்தி வருகிறது.
 
இந்த பிரபலமான சமூகவலைதளங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும்  குறிப்பாக அன்றாட செய்திகள், நாட்டு நடப்பு, ஆன்மிகம், ஆரோக்கியம், தொழில்நுட்பம், சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், பிரபலங்கள் போட்டி, யூ  டியூப், மக்கள் கருத்து போன்ற அனைத்து தகவல்களையும் பிரத்தியேகமாக வழங்கி வருகிறது.
இன்று சாமானியன் முதல் சாம்ராஜியம் ஆளுபவர் வரை எல்லார் கைகளிலும் சமமாக வலம்வரும் ஸ்மார்ட்போன்கள் டிஜித்தல் யுகத்தில் இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறது வெப்துனியா. கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக்,  வாட்ஸ் ஆப், யூ டியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெப்துனியா தனது பங்களிப்பை கொடுத்து வருகிறது.

இன்றைய  காலகட்டத்தில் ஒருவர் தனிமையில் இருக்கும்போது இணையத்தில் செலவழிக்கும் நேரம்தான் அதிகம். அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் அனைத்தும், அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள்  மிகத் துல்லியமாக அவர்களை சென்றடையும் வகையில் மொபைலின் மூலமே நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளும் வகையில் வெப்துனியா  தமிழ், மிக துல்லியமான செய்திகளை, மற்ற சமூக வலைதள ஊடங்களுக்கிடையே போட்டிபோட்டு வருகிறது.
 
வெப்துனியா முயற்சி என்ற ஒன்றை மட்டும் விடாமூச்சாய் பிடித்து சமூக வலைதளங்களில் இன்றையளவும் பயணித்து கொண்டிருக்கிறது. இனியும் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலும், தரமான, அனைவரையும் சென்றடையும் வகையிலும் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் தான் வெப்துனியா தன்னுடைய பயணத்தில் 20 வருடங்கள் ஆகியும் நிலைத்து நிற்கிறது.