1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (18:43 IST)

வழிமறைத்த பேருந்து... ஓட்டுநருக்கு பாடம் கற்பித்த துணிச்சல் பெண் .. வைரல் வீடியோ

கேரள மாநிலத்தில் சாலை விதிகளை மீறி வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இன்று கேரளாவில் ஒரு பெண் அலுவலகம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல சாலையில் வந்த ஒரு கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் , வலது புற சாலையில் பேருந்தை நிறுத்திவைத்தார். 
 
எதிரே வரும் வானகங்கள் செல்லமுடியாதபடி இருந்ததால், அந்தப் பெண் ஒரு ’இன்ச் கூட’ நகராமல் நின்ற இடத்திலேயே நின்று பேருந்து ஓட்டுநரை  முறைத்து பார்த்தார்.
 
பின்னர், அரசு பேருந்து ஓட்டுநர்  இடதுபுற சாலைக்கு பேருந்தை திருப்பி மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு நிறுத்தினார்.
 
அந்த பெண்ணின் தைரியத்தைப் பார்த்த ஒருவர் இந்தக் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.