வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (12:28 IST)

தினமும் 2000 ஆம்புலன்ஸ்களுக்கு இலவச எரிபொருள்: ரிலையன்ஸ் அறிவிப்பு

தினமும் 2000 ஆம்புலன்ஸ்களுக்கு 50 லிட்டர் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா பாதிப்பு காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஆம்புலன்ஸ்கள் ஓய்வில்லாமல் இயங்கி வருகின்றன. ஆம்புலன்ஸ் டிரைவர்களும் விடுமுறை எடுக்காமல் அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 50 லிட்டர் வீதம் தினமும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் மத்திய அரசையும் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் பொதுமக்கள் திட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதே ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 2000 ஆம்புலன்சுக்கு இலவசமாக தினமும் 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க முன்வந்துள்ளதை அடுத்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது