30 ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சி தகவல்!

Last Updated: திங்கள், 10 மே 2021 (08:34 IST)

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற சிக்கல்களும் சிகிச்சை அளிப்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகைகளில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பீகார் மாநில பாஜக எம்பியும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடியின் அலுவலகத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :