வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (10:28 IST)

சிறையில் இருக்கும் கைதிகளை சந்திக்க தடை – தமிழக அரசு உத்தரவு !

தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக சம்மந்தமான நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்களை எங்கும் கூட்டமாகக் கூடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் சந்திக்க இரண்டு வாரக் காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள், காவலர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சோப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.