புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (15:01 IST)

இனி இப்படித்தாதன்... மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

இனி சுழற்சி வகுப்புகள் இல்லை என்றும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்று  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி முறை சுழற்சி முறையில் இனி வகுப்புகள் இல்லை என்றும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது இது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இதுவரை நடந்த சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஜனவரி முதல் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும். 
 
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையும், கல்லூரிகள், பாலிடெக்னிக் பயிற்சி மையங்கள் 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்கம் போல நேரடி வகுப்புகளை நடத்தலாம். மேலும் கொரோனாக்கான விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.