ஆஃப்கானிஸ்தானில் அகதிகள் போராட்டத்தில் பங்கேற்கத் தடை!
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அகதிகள் போராட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபான் களின் ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு அங்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு, ஐ நா சபையும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், இரானில் ஹிஜாப்பிற்கு எதிராகப் போராட்டம் நடந்து வருவதாலு, பாகிஸ்தானில் உள்ள பொருளாதார நெருக்கடியாலும் இரு நாடுகளைச் சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தானுக்கு அகதிகளாக வந்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இரு நாட்டைச் சேர்ந்தவர்கள் அப்பிரச்சனையில் பங்கேற்கக் கூடாது எனறும் அது அவர்கள் நாட்டுப் பிரச்சனை என்று தெரிவித்து, தலிபான் துணை மந்திரி அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
இது அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj