எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் முறையை எதிர்த்து கேஸ் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாஸை பாட்லிங் மையங்களுக்கு கொண்டு செல்ல தனியார் கேஸ் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவற்றிற்கான ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தங்களுக்கு ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனால் புதிய ஒப்பந்தத்தில் லாரிகளின் தேவையில் 2 ஆயிரம் லாரிகளை குறைத்துள்ளதோடு, 21 டன் எடை கொண்ட கியாஸ் லாரிகளுக்கு முன்னுரிமை உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கியாஸ் லாரி உரிமையாளர்கள் இந்த புதிய விதிமுறைகளை மாற்றி, பழைய விதிமுறைகள் படியே ஒப்பந்தங்கள் பெறப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் இன்று முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா என தென்னிந்தியாவை சேர்ந்த 6 மாநிலங்களின் கேஸ் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பாட்டிலிங் ஆலைகளுக்கு கேஸ் செல்லாது என்பதால் கேஸ் சிலிண்டர் உற்பத்தியும், விநியோகமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Edit by Prasanth.K