புத்தாண்டில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை: தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்து சாதனை?
ஜனவரி 31ஆம் தேதி மற்றும் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை சுமார் ரூ. 430 கோடி தகவல் வெளியாகி உள்ள நிலையில், தென்னிந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை ஆகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி 400 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 430 கோடிக்கு மது விற்பனை ஆகி வந்ததாக டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
புத்தாண்டு விற்பனை குறித்து டாஸ்மார்க் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த செய்தி ஊடகங்களில் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தில் தெலுங்கானாவில் 402 கோடி ரூபாய், ஆந்திராவில் 328 கோடி ரூபாய், கர்நாடகாவில் 308 கோடி ரூபாய் மற்றும் கேரளாவில் 108 கோடி ரூபாய் மது விற்பனை ஆகிய நிலையில், இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுக்கு, டாஸ்மாக் மது விற்பனை மூலம் தான் அதிக அளவு வருவாய் கிடைத்து வருகிறது என்பது தெரிந்தது
Edited by Siva