திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2026 (20:29 IST)

மேலிட அழுத்தம்.. காங்கிரஸை கைவிட்ட தவெக!.. நடந்தது என்ன?...

rahul vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியவுடன் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் பேசும் போது ‘எங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்’ என அறிவித்தார். இதனால் பல கட்சிகளும் தங்களை தேடி வரும் என நம்பினார்..

இது எந்த கட்சிக்கு பிடித்திருந்ததோ இல்லையோ காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் அந்த கட்சிக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக பங்கு கொடுப்பதில்லை. எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஒரு பக்கம் அதை கொடுப்பதாக சொன்ன தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது..

தவெக தரப்பு காங்கிரசுக்கு 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவி ஆகியவை கொடுப்பதாக சொன்னது. எனவே தாங்கள் கேட்பதை திமுக கொடுக்கவில்லை என்றால் தவெக பக்கம் சென்று விடலாம் என காங்கிரஸ் யோசித்ததாக தெரிகிறது. ஆனால் தவெக தர்ப்பிடம் பேசிய பாஜக தலைமை ‘நீங்கள் தனியாக நிற்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை.. ஆனால் காங்கிரஸுடன் கூட்டி அமைக்கக் கூடாது.. அப்படி அமைத்தால் கரூர் சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட விஷயங்களில் உங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்’ என அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்தே காங்கிரஸுக்கான கூட்டணி கதவை மூடியிருக்கிறதாம் தவெக.

அதனால்தான் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என நேற்று முதல்வர் ஸ்டாலின் கூறியும் அந்த கட்சியுடன் கூட்டணி என காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.