1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (16:06 IST)

நான் அமைச்சராக இருந்துள்ளேன், அண்ணாமலை கவுன்சிலர் கூட கிடையாது: ஆர்பி உதயகுமார்

நான் மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக இருந்து உள்ளேன், அண்ணாமலை ஒரு கவுன்சிலர் ஆக கூட இருந்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுகவின் மதிப்பு அண்ணாமலைக்கு தெரியவில்லை, நான் மூன்று முறை அமைச்சராக இருந்து உள்ளேன், ஆனால் அவர் ஒரு கவுன்சிலர் பதவியில் கூட இதுவரை இருந்ததில்லை அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா மற்றும் அதிமுகவை பற்றி அண்ணாமலை அவதூறாக பேசியதை நாங்கள் மறந்து விட மாட்டோம். தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் கூட்டணியில் இருக்க முடியாது என்று கூறினார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்க கூட திமுகவுக்கு அருகதை இல்லை என்றும் அதேபோல் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம் உட்பட எதுவுமே கிடைக்காததால் விரக்தி உச்சத்தில் உள்ளார் என்றும் கூறினார்
 
Edited by Siva