வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:24 IST)

அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி- புரட்சிபாரதம் கட்சி தலைவர்

puratchi bharatham party
அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான  அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால்தான் அக்கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. வரும் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி உறுதி செய்யப்படும். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 தனித்தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கீடு  செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.