1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rats eat eleven kilogra kanja,

11 கிலோ கஞ்சாவை தின்ற எலிகள்.. குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை..!

rats
11 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்ட நிலையில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
22 கிலோ கஞ்சா கடத்தியதாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. 
 
இந்த நிலையில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டது என்றும் மீதி 11 கிலோ கஞ்சா மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
இதனை அடுத்து வழக்கில் குற்றம் காட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதால் கஞ்சா கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் குளிக்க தடை..! சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!