6 மாதம் பொருள் வாங்கலனா ரேஷன் கார்டு ரத்து!.. மத்திய அரசு அதிரடி...
கடந்த ஆறு மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது உள்ளிட்ட குளறுபடிகளை நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை நாளை முதல் முடக்க நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும். ஆனால், பெயர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது. ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க மூன்று மாதத்துக்குள் KYC நடைமுறையை முடிக்க வேண்டும். அதாவது, தேவையான ஆவணங்களை ரேஷன் கடைகளில் கொடுத்து முடக்கப்பட்ட கார்டை புதிப்பித்து கொள்ளலாம்.