வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (10:04 IST)

பிறை தெரிஞ்சிட்டு! பாய் பிரியாணி ரெடியா! - தொடங்கியது ரம்ஜான் கொண்டாட்டம்!

இஸ்லாமிய மக்களின் புனித திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையானது ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்புக்குப் பிறகே கொண்டாடப்படுகிறது. அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி கொண்டாடப்படும் இந்த ரம்ஜான் பண்டிகையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை தொடங்கியுள்ளனர். ரம்ஜான் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். தமிழ்நாட்டில் மத பாகுபாடின்றி இந்து -இஸ்லாமிய மக்கள் நட்புறவை பேணி வரும் நிலையில் ஒருவருக்கொருவர் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி ரமலானை கொண்டாடுகின்றனர்.

இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பல அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.