வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (20:48 IST)

பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை - அரசு தலைமை காஜி அறிவிப்பு

ramjan
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை ரம்ஜான் எனப்படும் நோன்பு  பெருநாள் பண்டிகை  நாள்.

இந்த நாளின்போது, ஏழை மக்களுக்கு, வறுமை நிலையில் இருப்போர்க்கு இஸ்லாமிய அன்பர்கள் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அளித்து கொண்டாடுவர்.

இந்த ஆண்டிற்கான ரம்ஜானையொட்டி சில நாட்களுக்கு முன் நோன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்று இஸ்லாமிய பெரியோர் முடிவு செய்வர்.

அதன்படி, தமிழகம் முழழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பிறை தென்பட்டதை அடுத்து,  நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  அரசு தலலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதனால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.