திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (13:38 IST)

சிங்கிள்களுக்கு இன்று இலவச பிரியாணி: பிரபல உணவகம் அறிவிப்பு!

biriyani
காதலர் தினமான இன்று சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி வழங்குவதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல உணவு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. 
 
இன்று காதலர் தினம் என்பதால் ஜோடி ஜோடியாக காதலர்கள் கடற்கரைகள் பூங்காக்கள் உள்ளிட்ட பொது பகுதிகளில் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். 
 
ஆனால் ஜோடி கிடைக்காத சிங்கிள்கள் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கின்றார்கள். இதனை அடுத்து காதலர் தினமான இன்று சிங்கிள்களின் மனதை தேற்றும் வகையில் அவர்களுக்கு பிரியாணி இலவசம் என்ற சுவையான அறிவிப்பை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கானா கசானா என்ற உணவகம் அறிவித்துள்ளது. 
 
சிங்கிளாக இருப்பதை நினைத்து வருத்தப்படாமல் இருக்க இந்த சலுகையை வழங்க உள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து காதலர் தினத்தை கொண்டாடாத சிங்கிள்கள் இந்த உணவகத்திற்கு சென்று இலவச பிரியாணி சாப்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran