திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (18:45 IST)

மந்தி பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!

biriyani
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாணவி ஒருவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 
 
கேரளாவில் 19 வயது மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி என்பவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. காசர்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி கடந்த மாதம் ஹோட்டல் ஒன்றில் தரமற்ற மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணம் எலி விஷம் என்று தெரிய வந்துள்ளது. மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி செல்போனில் எலி விஷம் குறித்து கூகுளில் தேடி உள்ளார் என்று  தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து மாணவி அஞ்சு ஸ்ரீ எலி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் உண்மை என்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran