சின்ன பையன் கட்சியை காலி பண்ணுவான்னு கலைஞரே நினைச்சிருக்கமாட்டார்!.. இயக்குனர் டிவிட்...

செவ்வாய், 5 மே 2026 (15:08 IST)
தமிழ் சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆர் துவங்கி பல நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆருக்கு பின் விஜய்க்கு மட்டுமே மக்களின் பேராதரவு கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. அதாவது, விஜய் முதல்வராகவிருக்கிறார்.

விஜயின் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. விஜய் முதல்வராவது உறுதியாக விட்டாலும் தவெக ஆட்சி அமைக்க கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே காங்கிரஸ், பாமக, விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பில் பேசி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருபக்கம், விஜய் ஆட்சியை அமைக்க அதிமுக ஆதரவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த தேர்தலில் திமுகவை விஜய் தோற்கடித்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது. திமுக 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதுதான் திமுகவினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், விஜய் சிறுவனாக இருந்துபோது கலைஞர் கருணாநிதி கலந்துகொண்ட ஒருவிழாவில் அவர் தனது தந்தை மற்றும் தாயுடன் விஜய் நிற்கு புகைப்படத்தை பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா பகிர்ந்து ‘தனக்கு பின்னால் நிற்கும் இந்த சிறுவன் எதிர்காலத்தில் திமுகவை அழிப்பான் என கலைஞர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்’ என பதிவிட்டிருக்கிறார். இதற்கு ‘திமுகவை யாராலும் அழிக்கமுடியாது’ என திமுகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments