1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (07:56 IST)

என்னை இப்படி கிண்டல் பண்ணுகிறீர்களே… நான் யார் தெரியுமா? – ராமசுப்ரமணியன் புலம்பல்!

கடந்த ஆண்டு தொலைக்காட்சி விவாதங்களில் அதிகளவில் கலந்துகொண்டு செய்தி தொலைக்காட்சிகளின் செல்லப் பிள்ளையாக விளங்கியவர் ராம் சுப்ரமணியன்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சிகளில் அதிகமாக தலைகாட்டாத அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

என்னை ஊடகங்களில் முன்பெல்லாம் கல்வியாளர், பொருளாதார நிபுணர், அரசியல் விமர்சகர், எழுத்தாளர், ஆன்மீக பக்தர் என்று பல அடைமொழிகளில் அழைத்தபோது, பல கிண்டல், கேலி, விமர்சனங்கள், மீம்ஸ்கள் சமூக வலை தளத்தில் போட்டுத் தாக்கினார்கள்.
நான் பேராசிரியராகப் பணி புரிந்தவன், பொருளாதாரத்தில், கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவன், மூன்று முறை சிறந்த எழுத்தாளர் விருது பெற்றவன் ( இரண்டு முறை தமிழக அரசிடமிருந்தும், ஒருமுறை அரசு சாரா நிறுவனத்திருந்தும்) இருபதுக்கும் மேல் ஆங்கிலம் தமிழ் நூல்கள் எழுதியவன், 27 வருடம் மிகப்பெரிய நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர், தலைவர், முதுனிலைப் பொது மேலாளர் மற்றும் கம்பெனி செயலாளர் என்று வேலை செய்தவன், ஏற்றுமதி அதிகரிப்புக்காக இருமுறை மத்திய அரசு விருது பெற்றவன், நான் கையாண்ட அனைத்து கம்பெனி சட்ட கேஸ்களிலும் வெற்றி பெற்றவன், கடந்த 25 வருடங்களாக சிறப்பான முறையில் ஒரு பள்ளியை கிராமப்புறத்தில் நடத்தி வருபவன், இதுவரை 46 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவன், 100 நாடுகளுக்கு மேல் பயணித்தவன், உலகின் பல கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் குறித்து பல அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசியவன், தமிழக அரசின் " டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது " மற்றும் " தொழிலாளர் நல விருது " " சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது " பெற்றவன், தற்போதைய பள்ளிக் கல்வி அமைச்சரிடமிருந்து " வாழ் நாள் சாதனையாளர் விருது" பெற்றவன், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சற்று புலமை உள்ளவன், தமிழகத்தின் பல கோயில்களில், ஆன்மீக கூட்டங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் செய்தவன், காஞ்சிப் பெரியவரிடமிருந்து " சைவ நெறிக் காவலர் விருது" பெற்றவன், இந்த வயதிலும் ஓரளவு நன்றாகப் பாடக்கூடியவன், ஆர் எஸ் எஸ் அமைப்பில் 1963 இல் இருந்து உள்ளவன்.

1977 இல் ஜனசங்கம், பிறகு அது ஜனதா கட்சியான பிறகு அதில் இணைந்து, பிறகு அது பா ஜ க என்று உருவானபோது அதில் இணைந்து பல பொறுப்புக்களில் இருந்தவன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவனாக இருக்கும்போது கலந்து கொண்டவன், பழைய ஸ்தாபன காங்கிரசில் காமராஜருக்காகப் பணியாற்றியவன், 1969 இல் நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் என் பல்கலைக்கழக நண்பர்களுடன் பிரச்சாரம் செய்தவன், 1971 இல் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்தவன் என்று எவ்வளவோ நிலைகளைக் கடந்து வந்தவன்.

இவை எல்லாம் தெரியாதவர்கள் என்னை கேலிச்சித்திரம் வரைந்து மகிழ்ந்தார்கள். அது சரி, நியூஸ் 7, நியூஸ் 18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் ஒரு சில ஆஸ்தான வித்வான்களை தினமும் அழைத்து இப்படிப்பட்ட பட்டங்களை வழங்கிப் பேச வைக்கிறார்களே. அவர்கள் கல்வியாளர்கள்களா, எங்கே பேராசியர்களாக இருந்தார்கள், என்ன பொருளாதாரப் பட்டம் பெற்றவர்கள், அவர்கள் அரசியல் பின்புலம் என்ன, அவர்கள் சமூகப் பணிகள் யாவை ? கொஞ்சமும் ஊடக தர்மமில்லையா? யாருக்கும் வெட்கமில்லை. மீம்ஸ் போராளிகளே! நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள். இதெல்லாம், இந்த ஊடக அதர்மங்களெல்லாம் கண்ணில் தெரியவில்லையா?.