புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (18:24 IST)

தமிழகத்துக்கு பாஜகதான் கரெக்ட்! அப்போ அமமுக? சசிகலா புஷ்பா உறுதி!

பாஜக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே தனது லட்சியம் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிறகு அமமுக ஆதரவாளராக இருந்த ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைய பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசிய போது ”நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் தேவைகளை நிறைவேற்றவும் பாஜக அரசால் மட்டுமே முடியும். பாஜக அரசை தமிழத்தில் கொண்டு வருவதுதான் ஒரே நோக்கம்” என்று பேசியுள்ளார்.

சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தது குறித்து அமமுக மற்றும்  அதிமுக தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பாஜகவை தமிழகத்தில் நிலைநிறுத்துவதாக சசிகலா புஷ்பா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.