விவசாயிகளின் பாதுகாவலனாக மாற வேண்டுமா? – ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த ராமதாஸ்!

ramadoss
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (14:55 IST)
விவசாயிகளின் பாதுகாவலனாக மாற இதையெல்லாம் செய்ய வேண்டும் என சிலவற்றை குறிப்பிட்டு மறைமுகமாய் ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார் ராமதாஸ்

அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. தமிழக அரசின் திட்டங்களுக்கு பாமக ஆதரவு மற்றும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சியான திமுக, அரசின் திட்டங்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி குறித்து தனது ட்விட்டரில் மறைமுகமாக பேசியுள்ள ராமதாஸ் விவசாயிகளின் பாதுகாவலானாக மாற எளிய வழிகள் என்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். மீத்தேன் திட்ட கையெழுத்து, சட்டசபை வெளிநடப்பு என அவர் குறிப்பிட்டுள்ளவை திமுகைவையும், மு.க.ஸ்டாலினையும் மறைமுகமாக குறிப்பிடுவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :